மாவட்ட செய்திகள்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று இருளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் இரா.பிரபு தலைமையில் திரளான பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
திருவள்ளூர்,

நாங்கள் சென்னீர்குப்பம், திருப்பாச்சூர், இருளஞ்சேரி, தொழுதவாக்கம், பேரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, சென்றாயன்பாளையம் போன்ற பகுதிகளில் காலம் காலமாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு பட்டா மற்றும் மாற்று இடம் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எங்களுக்கு இதுநாள் வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே பட்டா மற்றும் மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விநாயகர் படங்களுடன் ஊர்வலமாக வந்த விவசாயிகள் - குறைதீர்வு நாளில் பரபரப்பு
குறைதீர்வு நாளில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு விநாயகர் படங்களுடன் விவசாயிகள் ஊர்வலமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. கழிவறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. கூடலூரில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
கூடலூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
4. வேலை வழங்க கோரி ஊராட்சி அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகை
அனைவருக்கும் வேலை வழங்க கோரி அதவத்தூர் ஊராட்சி அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
5. மணப்பாறையில் குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மணப்பாறையில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.