மாவட்ட செய்திகள்
குள்ள நரி வளர்த்த பட்டாசு ஆலை பொறுப்பாளர் கோர்ட்டில் ஆஜர்

சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் குள்ள நரி வளர்த்த பட்டாசு ஆலை பொறுப்பாளரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் குள்ளநரி வளர்த்து வருவதாக சிவகாசி, விருதுநகர் வனபாதுகாப்பு படைக்கு தகவல் வந்ததைதொடர்ந்து அங்கு வனவர் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு கடந்த ஒரு வருடமாக குள்ளநரி வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்தது. அதனை உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் நரியை வளர்த்ததாக ஆலையின் பொறுப்பாளரான ரத்தினசாமி (வயது 65) என்பவரை கைது செய்தனர். அவரை நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நரியை வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.