சாராயம் விற்றதாக மூதாட்டி உள்பட 3 பேர் கைது

வெண்ணந்தூர், மோகனூர் பகுதிகளில் சாராயம் விற்றதாக மூதாட்டி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-04 22:30 GMT
வெண்ணந்தூர், 

மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 65). இவர் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக நாமக்கல் மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் ஆலோசனையின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று மூதாட்டி பாப்பாத்தி வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த 6 லிட்டர் சாராயம் மற்றும் 50 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக பாப்பாத்தியை கைது செய்து மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெண்ணந்தூரை அடுத்து உள்ள ஓ.சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக நாமக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 32), செங்கோட்டுவேல் என்பவரின் மகன் தாமரைச்செல்வன் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 6 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தும்பல் பகுதியில் இருந்து சாராயம் வாங்கி வந்து சவுதாபுரம் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது.

வெண்ணந்தூர், மோகனூர் பகுதிகளில் சாராயம் விற்றதாக மூதாட்டி உள்பட 3 பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்