எல்.ஜி. ஹெச்.டி. ஓலெட் ஸ்மார்ட் டி.வி.

ஸ்மார்ட்போன்களில் புதிய மாடல்களில் எப்படி புதிய நுட்பங்கள், வசதிகள் புகுத்தப்படுகின்றனவோ அதைப் போலவே டி.வி.க்களிலும் புதிய மாடல்களும் வந்த வண்ணம் உள்ளன.

Update: 2018-09-05 10:39 GMT
கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் முன்னேறிய தொழில்நுட்பமான ஓலெட்-ஐ பயன்படுத்தி 55 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓலெட் என்பது ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோடு என்பதன் சுருக்கமாகும் (Organic Light Emitting Diode OLED). இந்த நுட்பத்தில் விலை குறைந்த மாடலை ஏற்கனவே இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது முன்னேறிய தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய பிரமாண்டமான ஸ்மார்ட் டி.வி.யை ரூ.2.5 லட்சம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ‘சி8’ என்ற வெர்ஷனைக் கொண்ட இந்த மாடல் முந்தைய ‘சி7’ மாடலைக் காட்டிலும் சில சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

இதில் படங்கள் மிகச் சிறப்பாக உள்ளன. இதில் 4 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்டுகள் உள்ளன.

55 அங்குலம் மட்டுமின்றி அடுத்தகட்டமாக 65 அங்குலம் மற்றும் 77 அங்குலங்களைக் கொண்ட டி.வி.யையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பேனல் ரெசல்யூஷன் 3840 X 2160 4-கே என்ற அளவினதாக உள்ளது. ஹெச்.டி.ஆர். 10, டால்பி விஷன் சப்போர்ட் உள்ளது. இதன் எடை 19 கிலோவாகும். யு.எஸ்.பி. போர்ட் 3, ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் 4 உள்ளது. புளூடூத் 4.2 மற்றும் எதர்நெட் வசதியும் உள்ளது. இதில் 2.2 சி.ஹெச். ஸ்பீக்கர்கள் 40 வாட்ஸ் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

இதன் வடிவமைப்பு மிகவும் உயர் தரத்தில் உள்ளது. ஓலெட் டி.வி.யின் சிறப்பம்சமே இதில் படங்கள் மிகத் தெளிவாக தெரிவதுதான். மேலும் வீட்டிலுள்ள குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ப டி.வி. கேமிங் வசதிகளும் உள்ளன. இதில் இருக்கும் காட் ஆப் வார், ஹோரிசான் ஜீரோ டான், கியர்ஸ் 4 மற்றும் ஹாலோ 5 உள்ளிட்ட விளையாட்டுகள் குழந்தைகளை வெகுவாகக் கவரும்.

இதன் ரிமோட் முனைப் பகுதிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியவற்றுக்கென தனித்தனி பட்டன்களும் உள்ளன. நேவிகேஷனுக்கென ஸ்குரோல் வீல் கம் செலக்ட் பட்டன் இருப்பது வசதியாக உள்ளது.

ஸ்மார்ட் டி.வி.யில் எல்.ஜி.யின் புதிய வரவு நிச்சயம் வீட்டில் உள்ளவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.

மேலும் செய்திகள்