பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-09-05 22:15 GMT

பொள்ளாச்சி,

அனைத்து துறைகளிலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டத்தை திருத்த கூடாது. விலைவாசி உயர்வை, பெட்ரோல்–டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் சாகுல் அமீது தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் தங்கமணி கோரிக்கைள் குறித்து விளக்கி பேசினார். முன்னதாக கிளை செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதில் செயலாளர் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகி மகாலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க நிர்வாகி பாட்சா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்