நெல்லையில் பிறந்தநாள் விழா: வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சி. பிறந்தநாளையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2018-09-05 21:30 GMT

நெல்லை,

வ.உ.சி. பிறந்தநாளையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

வ.உ.சி. பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுன் பொருட்காட்சி திடல் வ.உ.சி.மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ஷில்பா தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.முத்துக்கருப்பன் எம்.பி., நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கட்சி நிர்வாகி ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.–காங்கிரஸ்

தி.மு.க. சார்பில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள சிலைக்கு டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாரதீய ஜனதா கட்சி சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

அ.ம.மு.க.– த.மா.கா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அவருடன் அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன், அவைத்தலைவர் கணேசன் மற்றும் பலர் வந்து இருந்தனர்.

த.மா.கா. சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

தே.மு.தி.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஜான் பாண்டியன்

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ம.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அவருடன் நிர்வாகி நிஸ்தார் அலி உள்பட பலர் வந்து இருந்தனர். ச.ம.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சேவியர் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தார்.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு தலைமையிலும், இந்து முன்னணி சார்பில் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையிலும், விடுதலை களம் சார்பில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையிலும், சைவ வேளாளர் சங்கம் சார்பில் மாநில தலைவர் ராஜா தலைமையிலும், மாவீரர் சுந்தரனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையிலும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதுபோல் பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்