மாவட்ட செய்திகள்
அதிராம்பட்டினம் அருகே சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது

அதிராம்பட்டினம் அருகே சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது.
அதிராம்பட்டினம்,


அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சுனாமியின் போது கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மக்கள் மற்றும் ஆடு, மாடுகளை எப்படி காப்பாற்றுவது? என்பது பற்றியும், அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்குவது பற்றியும் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இதில் மனிதர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை விளக்கி மருத்துவக்குழு மூலம் மருத்துவ முகாமும், ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவக்குழு மூலம் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் மகாலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், தாசில்தார் சாந்தகுமார், வருவாய் அதிகாரி முத்துலட்சுமி மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கடலோர காவல் படை போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.