திருத்துறைப்பூண்டியில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-05 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணைத்தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் முருகானந்தம், முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் தருமையன், பொருளாளர் சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15,700-ஐ கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப் படும் ஓய்வூதியம் போன்று 50 சதவீதம் ஊதியத்தில் கணக்கீடு செய்து வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதை போன்று போனஸ் ரூ.3000 வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் வட்ட தலைவர் பாண்டியன், சரக அமைப்பாளர்கள் குமார், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்