மாவட்ட செய்திகள்
ஒருநாள் விடுப்பு எடுத்து கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர்கள் தங்களின் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் விடுப்பு எடுத்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 27-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
திருவண்ணாமலை,


தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் திருவண்ணாமலை வட்டத்தின் சார்பில் கிராம உதவியாளர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் ரமணன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ரவி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்துக்குச் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கே.பெருமாள் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஜமாபந்தி, இயற்கை இடர்பாட்டுக்குச் சிறப்புப் படி வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்குப் பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் கிராம உதவியாளர்களுக்குக் கடைசியாக பெறும் ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் கஜேந்திரன் நன்றி கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர் நிருபர்களிடம் கூறுகையில், எங்களின் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந்தேதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தோம். அடுத்த கட்டமாக இன்று (நேற்று) ஒருநாள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக வருகிற 27-ந்தேதி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதில் மாவட்டத்தின் அனைத்துக் கிராம உதவியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர், என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்
பண்ருட்டி ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதில் வீடுகளை இழந்தவர்கள் கடலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2. ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அவற்றை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்
சாப்பாடு கூட கொடுக்காமல் சித்ரவதைக்கு ஆளான கர்ப்பிணி தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்.
4. தென்காசி நகரசபை அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
தென்காசி நகரசபை அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட கற்சிலைகள் சேதம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட கற்சிலைகள் சேதமடைந்தது. இதனை கண்டித்து இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.