தர்மபுரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-09-05 22:45 GMT
தர்மபுரி,

வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

வருவாய்த்துறை அலுவலர்களுக்கு முறையான பதவி உயர்வை வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார். வட்ட கிளைத்தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சலீம்பாஷா, மாவட்ட பொருளாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் ராம கிருஷ்ணன் கண்டன உரை ஆற்றினார். இதில் நிர்வாகிகள் பண்டரிநாதன், தியாகராஜன், நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மத்திய செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்