பிரதமரின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க நவம்பர் 15-ந்தேதி கடைசி நாள்

முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள் பிரதமரின் கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க வருகிற நவம்பர் மாதம் 15-ந்தேதி கடைசி நாளாகும். இது தொடர்பாக கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2018-09-06 21:30 GMT
கடலூர், 


மருத்துவம், தொழிற்கல்வி, மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளில் சேர்க்கை பெற்ற முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள், படைப்பணியின் போது இறந்த படைவீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த கல்வி உதவித்தொகை பெற பிளஸ்-2 மற்றும் முதுகலை பட்டத்துக்கான குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். மேலும் 2018-19-ம் கல்வி ஆண்டில் சேர்க்கைப்பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.

பிரதமரின் கல்வி உதவித்தொகையை பெற www.ksb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின்னர் உரிய ஆவணங்களை சரிபார்த்தலுக்காக முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண் டும். விண்ணப்பிக்க வருகிற நவம்பர் 15.11.2018 அன்று கடைசிநாள் ஆகும். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-294732 என்ற டெலிபோன் எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்