தஞ்சையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் ஆகியவை சார்பில் தஞ்சை முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-09-06 22:45 GMT

தஞ்சாவூர்,

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் ஆகியவை சார்பில் தஞ்சை முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் இளையராஜா வரவேற்றார். இதில் தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜெ.ராஜா, மாவட்ட செயலாளர் கருணாநிதி, முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன் மற்றும் ஏ.ராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பிளஸ்–1, பிளஸ்–2 மாணவ, மாணவிகளை தயார்படுத்த பயிற்சி வகுப்பு எடுக்க புதிதாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை 2–ம் கட்ட கலந்தாய்வு மூலம் ஒளிவுமறைவற்ற முறையில் நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தை தலைமை ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் முடித்து வைத்து பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் பி.இளையராஜா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்