ஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

ஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-09-06 22:45 GMT
ஆத்தூர்,

ஆத்தூர் நகராட்சி 31-வது வார்டு வ.உ.சி. நகர் மற்றும் பெரியார் நகர் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், நேற்று காலை மிக குறைந்த அளவே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சேலம் - கடலூர் ரோடு கிரைன் பஜார் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் நகராட்சி பணி மேற்பார்வையாளர் தேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது மாலையில் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெண்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்