மாவட்ட செய்திகள்
சொத்துக்காக தாத்தாவை கொன்ற வாலிபர் கைது

சொத்துக்காக தனது தாத்தாவை கூலிப் படையை ஏவி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,

.மும்பை கோட்டை பகுதியில் உள்ள சந்த நிவாஸ் கட்டிடத்தில் தனியாக வசித்து வந்த முதியவர் ஆஜா லாமா(வயது84). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தான் வசித்து வந்த கட்டிடத்தின் 2-வது மாடி படிக்கட்டில் படுகாயங்களு டன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பேத்கர் மார்க் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்தநிலையில் சொந்த பிரச்சினையின் காரணமாக முதியவரின் மருமகள் மற்றும் அவரது பேரன் டோர்ஜி லாமா(29) தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் தனியாக தங்கியிருந்தனர். இதையடுத்து போலீசார் முதியவரின் பேரன் டோர்ஜி லாமாவிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்தான் சொத்துக்காக கூலிப்ப டையை ஏவி தாத்தா ஆஜா லாமாவை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து பேரன் டோர்ஜி லாமாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ‘‘சில ஆண்டுகளுக்கு முன் டோர்ஜி லாமாவின் தாய்க்கு முதியவர் ஆஜா லாமா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியாலும், சொத்துக்காகவும் அவரை கொலை செய்ய பேரன் டோர்ஜி லாமா திட்ட மிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கூலிப்படையினரிடம் கொடுத்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது’’ தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கூலிப்படையினர் உட்கார்ஷ் சோனி (19), ஏஞ்சல் பிசே (21), ஆனந்த ராய் (21) மற்றும் ஜேயேஷ் கானுஜியா (22) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.