கோவில் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை மற்றும் சிவகங்கை பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2018-09-06 23:35 GMT
தேவகோட்டை, 



தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் உள்ள நாச்சியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பெரியகாரை-கல்லல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 18 வண்டிகள் கலந்து கொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் ஆகிய 2 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை விராமதி தையல் நாயகி வண்டியும், 2-வது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும், 3-வது பரிசை அதிகரை வேங்கை வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை வீரை மகேந்திரன் வண்டியும், 2-வது பரிசை பரவை முத்துநாயகி வண்டியும், 3-வது பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும் பெற்றது. இதேபோல் தேவகோட்டையை அடுத்த உடப்பன்பட்டி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் உடப்பன்பட்டி-எழுவன்கோட்டை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 25வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை உடப்பன்பட்டி சின்னையா வண்டியும், 2-வது பரிசை மாவிடுதிக்கோட்டை அவிநாசி வண்டியும், 3-வது பரிசை உடப்பன்பட்டி பூமி வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 15 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை போராட்டுக்கோட்டை மாயழகு வண்டியும், 2-வது பரிசை தேவகோட்டை தவசி வண்டியும், 3-வது பரிசை தானாவயல் வெங்கடாச்சலம் வண்டியும் பெற்றன.

சிவகங்கை அருகே பெரிய கண்ணனூர் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பெரிய கண்ணனூர்-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 21 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை கொட்டக்குடி மணி வண்டியும், 2-வது பரிசை பாகனேரி தியாகராஜன் வண்டியும், 3-வது பரிசை நகரம்பட்டி சம்பத்ராஜா வண்டியும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 14வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை சொக்கநாதபுரம் பிரபா வண்டியும், 2-வது பரிசை கள்ளிக்குடி யோகஸ்ரீ வண்டியும், 3-வது பரிசை மேலமடை சீமான்பாண்டியராஜன் வண்டியும் பெற்றன.

வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்