மாவட்ட செய்திகள்
கூடுதல் ரெயில்களை இயக்கக்கோரி 9-ந்தேதி உண்ணாவிரதம்

அருப்புக்கோட்டை வழியாக ரெயில்களை இயக்கக் கோரி வருகிற 9-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று ரெயில் பயணிப்போர் சங்கம் மற்றும் வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்து உள்ளனர்.
அருப்புக்கோட்டை,


வியாழன், ஞாயிறு ஆகிய 2 தினங்களில் மட்டும் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்கினால் அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியபாட்டி பகுதி மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள். சென்னை தாம்பரத்தில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு தினசரி ரெயிலாக அறிவிக்கப்பட்ட அந்தியோதயா பகல் நேர ரெயிலை விரைவில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொல்லத்தில் இருந்து ராமேசுவரம் வழியாக அருப்புக்கோட்டைக்கு புதிய ரெயில் இயக்க வேண்டும். மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் வழியாக புதிய வழித்தடம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

இதற்கான நில ஆர்ஜிதம் செய்து பணிகளை விரைவாக முடித்து இந்த வழித்தடத்தில் ரெயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பாக வருகிற 9-ந் தேதிரெயில் பயணிப்போர் சங்கம் மற்றும் வர்த்தக சங்கத்தினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக ரெயில் பயணிப்போர் நலச்சங்க தலைவர் மனோகரன் கூறியுள்ளார்.