ரூ.9 கோடி வரி செலுத்தாமல் மோசடி அரசு ஒப்பந்ததாரர் கைது

பெங்களூருவில் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வருபவர் இஸ்மாயில். அரசு பணிகளை டெண்டர் எடுத்து செய்து வரும் இவர், பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.

Update: 2018-09-07 00:12 GMT
பெங்களூரு,

அரசு பணிகளை செய்தது, பல்வேறு தொழில்கள் மூலம் கிடைத்த வருமானத்திற்காக அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் இஸ்மாயில் மோசடி செய்திருப்பதாக வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அரசு பணிகளை செய்ததற்காக ரூ.48 கோடிக்கு போலி ரசிதுகள் தயாரித்து இஸ்மாயில் கொடுத்திருந்ததும், இவ்வாறு போலி ரசிதுகள் கொடுத்ததால் அரசுக்கு ரூ.9 கோடி வரி செலுத்தாமல் அவர் மோசடி செய்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ரூ.9 கோடி வரி செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறி இஸ்மாயிலை வணிக வரித்துறை அதிகாரிகள் கைது செய்தார்கள்.

விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்