மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் நடந்த போலீஸ் உடல்தகுதி தேர்வில் 835 பேர் தேர்ச்சி போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தகவல்

தூத்துக்குடியில் நடந்த போலீஸ் உடல் தகுதி தேர்வில் 835 பேர் தேர்ச்சி பெற்று உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, தூத்துக்குடியில் நடந்த போலீஸ் உடல் தகுதி தேர்வில் 835 பேர் தேர்ச்சி பெற்று உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்து உள்ளார்.உடல் தகுதி தேர்வு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழு நடத்திய 2–ம் நிலை ஆண், பெண் காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டன்களுக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சியடைந்த தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1,486 ஆண் விண்ணப்பதாரர்களுக்கும், 613 பெண் விண்ணப்பதாரர்களுக்கும் உடல் தகுதித்தேர்வு கடந்த 3–ந்தேதி முதல் நேற்று வரை தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்தது.இந்த தகுதி தேர்வு நெல்லை போலீஸ் கமி‌ஷனர் மகேந்தர்குமார் ரத்தோடு, நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆகியோர் மேற்பார்வையில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையில் நடந்தது.835 பேர் தேர்ச்சி இதில் 1,486 ஆண் விண்ணப்பதாரர்களில் 385 பேர் தேர்வுக்கு வரவில்லை. 1,101 பேர் மட்டும் வந்தனர். இதில் 662 பேர் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் 613 பெண் விண்ணப்பதாரர்களில் 353 பேர் மட்டும் தேர்வில் கலந்து கொண்டனர். அதில் 173 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தகுதி தேர்வில் ஆண் விண்ணப்பதாரர்களில் 662 பேரும், பெண் விண்ணப்பதாரர்களில் 173 பேரும் என மொத்தம் 835 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல சதி: கைதான 5 பேரின் போலீஸ் காவல் முடிந்தது; சிறையில் அடைப்பு
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கில் கைதான 5 பேரின் போலீஸ் காவல் முடிவடைந்தது. இதனால் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
2. மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயம்
மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
3. நேர்மையான அதிகாரிகள், அரசுகளால் பந்தாடப்படுகின்றனர் - கர்நாடக போலீஸ் ஐ.ஜி. ரூபா பேட்டி
ஊழலுக்கு எதிராக நாடுமுழுவதும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றும், நேர்மையான அதிகாரிகள் வளைந்து கொடுக்க மறுப்பதால் அரசுகளால் இடமாற்றம் செய்யப்பட்டு பந்தாடப்படுகிறார்கள் என்றும் கர்நாடக மாநில ஐ.ஜி. ரூபா கூறினார்.
4. குட்கா ஊழல் விவகாரம்: ஜார்ஜ் குற்றச்சாட்டுக்கு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பதில்
குட்கா விவகாரத்தில் ஜார்ஜ் என் மீது வீண்பழி சுமத்துகிறார் என்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
5. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் இலக்கு டெல்லி கிடையாது - போலீஸ்
டெல்லி செங்கோட்டையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இரு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.