டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: 2வது நாளாக ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2018-09-07 23:15 GMT
நாமக்கல்,

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதன் விலையை குறைக்க வலியுறுத்தியும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட நாமக்கல்லில் நடந்த தாலுகா ரிக் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்துக்கு திருச்செங்கோடு ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக நாமக்கல் மாவட்டத்தில் ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரிக் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தன. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1 கோடி வீதம் 2 நாட்களுக்கு ரூ.2 கோடி வரை ரிக் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக நாமக்கல் தாலுகா ரிக் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்