பெங்களூரு கெம்பேகவுடா லே-அவுட்டில் 5 ஆயிரம் பேருக்கு குலுக்கல் முறையில் வீட்டுமனைகள் ஒதுக்கீடு

பெங்களூரு கெம்பே கவுடா லே-அவுட்டில் அரசு சார்பில் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டுமனைகளை குலுக்கல் முறையில் ஒதுக்கும் பணியை முதல்-மந்திரி குமாரசாமி வருகிற25-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

Update: 2018-09-08 00:14 GMT
பெங்களூரு,

பெங்களூரு வளர்ச்சி ஆணைய அலுவலகத்தில் அதன் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்துகொண்டு அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி னார். மேலும் அவர், பெங் களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளி டம் கேட்டறிந்தார். இந்த கூட்டம் முடிந்து பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட் டுள்ளன. இதில் வீடு வாங்குபவர் களுக்கு சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விலையில் 5 சதவீதமும், 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வாங்குபவர்களுக்கு 10 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும். டாக்டர் சிவராம் காரந்்த் லே-அவுட்டுக்கு 13 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி 3,564 ஏக்கரில் வீட்டுமனைகளை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.

அடுத்த 3 மாதங்களில் வீட்டுமனைகளை உருவாக்கு வது குறித்து மந்திரிசபையின் ஒப்புதல் பெறப்படும். வெளிவட்டச்சாலை அமைக்க அனுமதி கேட்டு மாநில அரசிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

65 கிலோ மீட்டர் நீள சாலையை அமைக்க ரூ.5,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. பழைய மெட்ராஸ் ரோட்டில் கோனதாசப்புரா அருகே 165 ஏக்கரில் ஒரு நவீன நகரத்தை உருவாக்க இன்றைய(நேற்று) கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக முந்தைய ஆட்சி காலத்திலேயே வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த தி்ட்டத்தை பெங்களூரு வளர்ச்சி ஆணையம் அமல்படுத்துகிறது. இந்த திட்ட அறிக்கையை விரைவாக தாக்கல் செய்யும்படி தனியார் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பனசங்கரி 6-வது ஸ்டேஜ் பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகம் கட்ட முடிவு ெசய்யப்பட்டுள்ளது. துமகூரு ரோடு தாசனபுராவில் தனித்தனி வீடுகளை கட்டி விற்பனை செய்தோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து ரூ.250 கோடியில் வீடுகள் கட்டி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். கெம்பேகவுடா லே-அவுட்டில் உருவாக்கப் பட்டுள்ள 5,000 வீட்டுமனை களை 5 ஆயிரம் பயனாளி களுக்கு குலுக்கல் முறையில் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குலுக்கல் பணியை வருகிற 25-ந் தேதி முதல்-மந்திரி தொடங்கி வைப்பார். வருகிற 10-ந் தேதி முதல் காலநிலை மாற்றம் தொடர்பாக சான்பிரான்சிஸ்கோவில் சர்வதேச மாநாடு நடக்கிறது. இதில் கலந்துகொள்ள நான் செல்கிறேன்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார். 

மேலும் செய்திகள்