உலகை மிரட்டும் சுனாமி அபாயம்!

இன்னும் சில ஆண்டுகளில் உலகின் பல நாடுகளின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என அமெரிக்கா வெர்ஜீனியா தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர் குழுவினர் கூறுகின்றனர்.

Update: 2018-09-08 07:02 GMT
அமெரிக்கா வெர்ஜீனியா தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்படி, தென் சீனக்கடல் பகுதியின் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடங்கி, உலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் ஏற்பட உள்ளதாக எச்சரிக்கின்றனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளவு உயர்ந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக, தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

மேலும் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அங்கு 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

அப்படி சுனாமி ஏற்பட்டால் தென் சீனக் கடல் பகுதியில் மணிலாவில் தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மிரட்டும் சுனாமி... மிரளும் உலகம்!

மேலும் செய்திகள்