சிங்கப்பூரில் ஆசியாவின் மிகப் பெரிய மரக் கட்டிடம்!

சிங்கப்பூரில் ஆசியாவிலேயே மிகப் பெரிய மரக் கட்டிடம் கட்டப்படவிருக்கிறது.

Update: 2018-09-08 09:12 GMT
சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்னும் ஐந்தாண்டுகளில் அந்த மரக் கட்டிடம் கட்டப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 40 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் அமையவிருக்கும் இந்த ஆறு மாடிக் கட்டிடம், வருகிற 2021-ல் கட்டி முடிக்கப்படும் என்றும், 180 மில்லியன் டாலர் செலவில் கட்டப்படவுள்ள இதில் நான்யாங் வர்த்தகப் பள்ளி அமையும் என்றும் பல்கலைக்கழகத்தின் தலைவர் சுப்பிரா சுரேஷ் கூறுகிறார்.

மரத்தால் அமையவிருக்கும் இக்கட்டிடமே நீடித்து நிலைக்கத்தக்க கட்டுமானத் திட்டங்களில் ஆக உயர்ந்த லட்சியத்துக்கு உரியது என்றும் அவர் கூறினார்.

தங்கள் பல்கலைக்கழகத்தின் கட்டிடங்களில் 95 சதவீதத்துக்கு, பசுமை சார்ந்தவை என அதற்கான கிரீன் மார்க் பிளாட்டினம் சான்றிதழைப் பெற்றுவிட்டதாகவும், உலகிலேயே மிகப் பசுமையான பல்கலைக்கழக வளாகம் எனப் பெயர் எடுக்கவேண்டும் என்பதே தங்கள் நோக்கம் எனவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்