ரூ.60 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

எஸ்.வி.நகரம், முள்ளிப்பட்டு ஊராட்சிகளில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பூங்கா, உடற்பயிற்சி கூடங்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

Update: 2018-09-09 22:48 GMT
ஆரணி,

ஆரணி ஊராட்சி ஒன்றியம், எஸ்.வி.நகரம் ஊராட்சியில் 2016-17-ம் நிதியாண்டில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் (ஜிம்) அமைக்கப்பட்டது. இதேபோல் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பிலான அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., ஆரணி உதவி கலெக்டர் தண்டாயுதபாணி, மாவட்ட திட்ட இயக்குனர் க.லோகநாயகி, செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.திலகவதி, எம்.பாண்டியன், க.கிருஷ்ணமுர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பூங்கா, உடற்பயிற்சி கூடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் அமைச்சர், கலெக்டர் உடற்பயிற்சி செய்தனர்.

நிகழ்ச்சிகளில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், கோவிந்தராசன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் என்.வாசு, துரைகன்னியப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.கே.பாஸ்கரன், குமரேசன், பி.திருமால், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பாரி பி.பாபு, பி.ஆர்.ஜி.சேகர், அசோக்குமார், எஸ்.ஜோதிலிங்கம், பி.ஜி.பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் எல்.சுரேஷ் நன்றி கூறினார்.

முன்னதாக ஆரணி நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையத்தில் கூடுதல் அம்மா உணவக கட்டிடத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து, உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து அமைச்சர், கலெக்டர், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் அம்மா உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டனர்.

இதில் தாசில்தார் கிருஷ்ணசாமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் கணேசன் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகராட்சி உதவி பொறியாளர் தேவநாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்