கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யவில்லை : எடியூரப்பா பேட்டி

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

Update: 2018-09-09 23:12 GMT
பெங்களூரு,

நாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறோம். தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். ஆனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நாங்கள் முயற்சி செய்வதாக அக்கட்சியினர் கூறுவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்களும், நிர்வாகிகளும் பா.ஜனதாவில் சேர உள்ளனர். நான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதால் நான் மீண்டும் டெல்லிக்கு செல்ல மாட்டேன்.

சில தொகுதிகளில் பலமான வேட்பாளர்களை நிறுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 25 தொகுதிகளில் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளோம். முதல்-மந்திரி குமாரசாமி நாளை(அதாவது இன்று) ஒரு குழுவுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார். அந்த குழுவில் பா.ஜனதா தலைவர்களும் இடம் பெற்று உள்ளனர். குடகு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளனர்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 

மேலும் செய்திகள்