ரூ.40 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது

விளாத்திகுளத்தில் கிட்டங்கியில் பதுக்கி வைத்து இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-09-09 23:43 GMT
விளாத்திகுளம், 


விளாத்திகுளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கனிராஜ். இவருடைய மகன் ஜெயராஜ் (வயது 45). அவர் மிட்டாய், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரி. வெளியூர்களில் இருந்து மொத்தமாக வாங்கி வரும் பொருட்களை விளாத்திகுளம் கீழரத வீதியில் உள்ள கிட்டங்கியில் வைத்து, சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவருடைய கிட்டங்கியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, அவைகள் வெளியூர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதனையடுத்து போலீசார் அந்த புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்