பெரம்பலூரில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்

பெரம்பலூரில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-09-10 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பெருந் திட்ட அலுவலக நுழைவு வாயில் அருகே இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை கலெக்டர் சாந்தா கொடிய சைத்து தொடங்கி வைத்தார். உண்போம்.. உண்போம்... இரும்பு சத்துள்ள உணவை உண்போம். தடுப்போம்.. தடுப்போம்... ரத்த சோகை நோயை தடுப்போம். சாப்பிடு வீர், அயோடின் சத்துள்ள உணவுகளை, பெற்றிடுவீர் அறிவும், ஆற்றலும் உள்ள குழந்தைகளை, பெண்மையை போற்றுவோம், வாழ்வில் முன்னேறுவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப் புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் ஏந்தியவாறும், விழிப் புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர்.

இந்த ஊர்வலம் ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு வழியாக சென்று பழைய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத் தில் ஊட்டச்சத்து விழிப் புணர்வு தொடர்பான உணவு பொருட்கள் கண்காட்சியினை கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்து, கண்காட்சியில் இடம் பெற்றுள்ள உணவுப் பொருட் கள் குறித்தும், அதிலுள்ள சத்துகள் குறித்தும் கேட்டறிந் தார். இதையடுத்து ஊட்டச் சத்து மாத விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் சாந்தா வாசிக்க, அதனை பின்தொடர்ந்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் படித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சி யர் விஸ்வநாதன், ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் கலந்து கொண் டனர்.

மேலும் செய்திகள்