மும்பை தமிழறிஞர் பாலையா மரணம்

மும்பையை சேர்ந்த தமிழறிஞர் புலவர் ந.பாலையா நேற்று மரணம் அடைந்தார்.

Update: 2018-09-10 22:00 GMT
மும்பை, 

மும்பையை சேர்ந்த தமிழறிஞர் புலவர் ந.பாலையா. மும்பையில் வசித்து வந்த பாலையா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தோப்படியூரில் நேற்று மரணம் அடைந்தார். தமிழ்ப்புலமை மிக்க புலவர் பாலையா 1950-களில் மும்பை வந்தார். பல ஆண்டுகாலம் தமிழாசிரியராக மும்பையில் பணிபுரிந்த அவர், மும்பை தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வகுப்புகளையும் நடத்தினார். அவரது இறுதிச்சடங்கு இன்று(செவ்வாய்க்கிழமை) அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள செட்டி மல்லன்பட்டியில் நடக்கிறது.

புலவர் பாலையாவின் மறைவுக்கு இலெமுரியா அறக்கட்டளை தலைவர் சு.குமணராசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்