சரக்கு வாகனங்களுக்கான எடை அனுமதி, வரி உயர்வு

நெல்லை மாவட்டத்தில் சரக்கு வாகனங்களுக்கான எடை அனுமதி, வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2018-09-10 23:12 GMT
நெல்லை, 


மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஆணைய உத்தரவுப்படி சரக்கு மற்றும் தேசிய அனுமதி சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லும் எடை விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி உயர்த்தப்பட்ட மொத்த வாகன எடை அடிப்படையில் வரி வசூல் செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

அதாவது முன்பு 16 ஆயிரத்து 200 கிலோ மொத்த வாகன எடையாக அனுமதிக்கப்பட்ட வாகனம் இனிமேல் 18,500 கிலோ வரை அனுமதிக்கப்படும். அதே போல் அந்த வாகனத்துக்கு ரூ.2,875 ஆக இருந்த வரி இனிமேல் ரூ.3,550 செலுத்த வேண்டும். இதுபோன்ற எடை மற்றும் வரி உயர்வு விவரம் பட்டியல் வருமாறு:- 

மேலும் செய்திகள்