திசையன்விளையில் மூதாட்டியின் வீட்டை உடைத்து ரூ.4¾ லட்சம் நகை, பணம் திருட்டு

திசையன்விளையில் மூதாட்டியின் வீட்டை உடைத்து ரூ.4¾ லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் திருடப்பட்டது.

Update: 2018-09-11 21:00 GMT
திசையன்விள்,

திசையன்விளையில் மூதாட்டியின் வீட்டை உடைத்து ரூ.4¾ லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் திருடப்பட்டது.

மகள் வீட்டுக்கு சென்றார் 

திசையன்விளையில் இட்டமொழி சாலையை சேர்ந்தவர் கொம்பையா தேவர். இவருடைய மனைவி முத்தம்மாள்(வயது65). இவர்களது மகள் சுமதி கணவர் மற்றும குடும்பத்தினருடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொம்பையாத்தேவர் இறந்து விட்டார். இதனால் முத்தமாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள மகள் வீட்டுக்கு முத்தம்மாள் சென்றார். வீட்டில் அவர் இல்லாததை அறிந்து கொண்ட மர்ம நபர்கள், சம்பவத்தன்று முன்பக்க கதவு மற்றும் பின்பக்க கதவு ஆகியவற்றை உடைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

15 பவுன் நகை–பணம் திருட்டு 

வீட்டிற்குள் இருந்த பீரோவையும் உடைத்து 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை திருடி கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.4¾லட்சம் என கூறப்படுகிறது.

நேற்று வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், கோவையில் இருந்த முத்தம்மாளுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வீட்டுக்கு விரைந்து வந்து நகை, பணம் திருட்டு போனது குறித்து திசையன்விளை போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்