மாவட்ட செய்திகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு202 சிறப்பு ரெயில்கள் இயக்கம்கொங்கன் ரெயில்வே அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 202 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக கொங்கன் ரெயில்வே அறிவித்து உள்ளது.
மும்பை, 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 202 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக கொங்கன் ரெயில்வே அறிவித்து உள்ளது.

202 ரெயில்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் இருந்து கொங்கன் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல விநாயகர் சதுர்த்தியையொட்டி கொங்கன் ரெயில்வே பயணிகள் வசதிக்காக 202 சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது.

இந்த சிறப்பு ரெயில்கள் மும்பை மற்றும் புனே, ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரத்னகிரி, சாவந்த்வாடி, மட்காவ் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட உள்ளது.

டிக்கெட் கவுண்ட்டர்கள்

இதற்காக 5 ரெயில் நிலையங்களில் சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கேட், சிப்லுன், ரத்னகிரி, கன்காவ்லி, சிந்து துர்க், குடால், சாவந்த்வாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் சிறப்பு மருத்துவ மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

ரெயில்நிலையங்களில் அதிகளவில் பயணிகள் குவிந்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.