கண்காணிப்பு கேமராக்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

எம்.ஆர்.சி நகரில் உள்ள ராணி மெய்யம்மாள் டவர்ஸ் குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-09-11 22:30 GMT
அடையாறு,

சென்னை போலீஸ் கமிஷனர் சென்னை நகர் முழுவதும் இந்த மாத இறுதிக்குள் போலீசின் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என கூறியுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் தங்கள் பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பட்டினம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபு குமார் ஏற்பாட்டில், மயிலாபூர் உதவி கமிஷனர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் எம்.ஆர்.சி நகரில் உள்ள ராணி மெய்யம்மாள் டவர்ஸ் குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அந்த குடியிருப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 240 வீடுகளை கொண்ட இந்த குடியிருப்பு வளாகத்தில் 1000 பேர் வசிக்கின்றனர். நிகழ்ச்சி முடிவில், ராணி மெய்யம்மாள் டவர்ஸ் குடியிருப்பின் சார்பில் பட்டினம்பாக்கம் பகுதியில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதாக குடியிருப்பு வாசிகள் உறுதியளித்தனர்.

மேலும் செய்திகள்