தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் சுய தொழில் தொடங்க நிதி உதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் சுய தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-11 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் சுய தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நிதியுதவி

தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கு உதவும் வகையில் சொந்த தொழில் தொடங்க ஒரு நபருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 10 நபருக்கு நிதியுதவியாக ரூ.2 லட்சம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதற்கு தகுதியான திருநங்கைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

விண்ணப்பம்

இதற்கு தூத்துக்குடியில் உள்ள தகுதியானவர்கள் தங்களின் ஆதார் அடையாள அட்டை, வாரிய அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு, விருப்பம் தெரிவிக்கும் தொழில் ஆகிய விவரங்களுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மாவட்ட சமூக நல அலுவலர் என்ற முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்