மாவட்ட செய்திகள்
வயதான தம்பதியர் தற்கொலை யார் அவர்கள்? போலீசார் விசாரணை

சாத்தூர் அருகே வயதான தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர், 


சாத்தூர் அருகே காட்டுப்பள்ளிவாசல் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நேற்று வயதான ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தனர். மாலையில் அந்தப்பக்கமாக சென்ற ஒருவர் இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து சாத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் அங்கு சென்றனர். இருவரது உடல் அருகே பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. எனவே இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் மேலும் இருவரும் கணவன்-மனைவியாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

இருவரது உடலையும் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட அந்த தம்பதியினர் யார் எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. வெளியூரில் இருந்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தற்கொலை செய்திருக்கலாமென்று தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.