மாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்

மாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2018-09-11 23:01 GMT
மதுரை, 


மதுரை தெற்கு மாவட்ட த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மகபூப் பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சேக் இப்ராகிம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாஜ்தீன் வரவேற்றார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் நூரூல்ஹக், மாவட்ட பொருளாளர் அப்துல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல்சமது, துணை பொதுச் செயலாளர் முகமது கவுல், தலைமை கழக பேச்சாளர் பாரூக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில், அக்டோபர் 7-ந்தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடக்கும் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், மே 17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்ட தடுப்பு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். தூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியா மீது போடப்பட்ட வழக்கை உடனே வாபஸ் பெற வேண்டும். அவரை அச்சுறுத்தி அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். மதுரை முனிச்சாலை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், வழிபாட்டு தலங்கள் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சேக் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்