கர்நாடகத்தில் 86 தாலுகாக்கள் வறட்சி பகுதிகளாக அறிவிப்பு வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி

கர்நாடகத்தில் 86 தாலுகாக்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளதாக மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

Update: 2018-09-11 23:30 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் 86 தாலுகாக்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளதாக மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

86 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள்

எனது தலைமையில் மந்திரிசபையின் துணை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கர்நாடகத்தில் 16 மாவட்டங்களில் 86 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.

அத்துடன் கால்நடைகளுக்கு தீவனம் வழங்க கால்நடைத்துறைக்கு ரூ.18 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. வறட்சி பகுதிகளில் பயிர்கள் கருகி இருப்பது குறித்து ஆய்வு செய்ய விவசாயம், தோட்டக்கலை, வருவாய், கிராம வளர்ச்சி ஆகிய துறைகளின் அதிகாரிகள் கூட்டாக இணைந்து ஆய்வு செய்வார்கள்.

கொள்ளேகால்

மழை பற்றாக்குறையால் வட கர்நாடகத்தின் உள்பகுதிகள் மற்றும் தென்கர்நாடகத்தின் உள்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளன. ஒசக்கோட்டை, கனகபுரா, சென்னபட்டணா, பங்காருப்பேட்டை, கோலார், மாலூர், முல்பாகல், சீனிவாசபூர், பாகேபள்ளி, சிக்பள்ளாப்பூர், சிந்தாமணி.

கவுரிபித்தனூர், குடிபண்டே, சிட்லகட்டா, சிக்கநாயக்கனஹள்ளி, குப்பி, கொரட்டகெரே, குனிகல், மதுகிரி, பாவகடா, சிரா, திப்தூர், துமகூரு, செல்லக்கெரே, சித்ரதுர்கா, இரியூர், முலகால்மூரு, ஹரப்பனஹள்ளி, ஹரிஹரா, கொள்ளேகால், எலந்தூர்.

விஜயாப்புரா

மத்தூர், மலவள்ளி, மண்டியா, நாகமங்களா, ஸ்ரீரங்கப்பட்டணா, பல்லாரி, ஹடகலி, ஒசப்பேட்டே, ஹகரிெபாம்மனஹள்ளி, கூட்லகி, சண்டூர், சிரகுப்பா, கங்காவதி, கொப்பல், குஷ்டகி, யல்பர்கா, தேவதுர்கா, லிங்கசூகூரு, மான்வி, ராய்ச்சூர், சிந்தனூர்.

அப்சல்புரா, சின்சோலி, சித்தாப்புரா, கலபுரகி, ஜேவர்கி, சேடம், சகாப்புரா, சவுராபுரா, யாதகிரி, பீதர், உமனாபாத், ராமதுர்கா, சவதத்தி, பாதாமி, பாகல்கோட்டை, ஹனகுந்த், ஜமகண்டி, பசவனபாகேவாடி, விஜயாப்புரா, இன்டி, முத்தேபிஹால்.

ராணிபென்னூர்

சிந்தகி, கதக், முன்டரகி, நரகுந்த், ரோணா, சிராஹட்டி, ராணிபென்னூர், உப்பள்ளி, நவலகுந்து, அரசிகெரே, பேளூர், கடூர் உள்பட 86 தாலுகாக்கள் வறட்சி பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

மேலும் செய்திகள்