வானவில் : சமைத்த உணவை சூடாக வைக்கும் நவீன குக்கர்

அலுவலகம் செல்லும் இல்லத்தரசிகளின் அவசர சமையல் வேலைகளுக்கு கைகொடுக்கும் வகையிலான நவீன பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன.

Update: 2018-09-12 05:47 GMT
அந்த வகையில் சமையலறைக்குத் தேவையான நவீன கருவிகளைத் தயாரிக்கும் கென்ட் நிறுவனம் ஸ்மார்ட் குக்கரை தயாரித்துள்ளது. இது மின்சாரத்தில் செயல்படுகிறது. இதில் வறுப்பது, பொரிப்பது உள்ளிட்ட பணிகளை, சமையல் கேஸ் உதவியின்றி எளிதில் செய்யலாம். சமையல் வேலைகளை முடித்தவுடன், இதன் வயரை நீக்கி விட்டு அப்படியே டைனிங் டேபிளுக்கு எடுத்துச் செல்லலாம்.

நீங்கள் சமைக்கும் உணவுப் பொருட்கள் சுகாதாரமாகவும், சுத்தமாகவும், சுவையாகவும் இருக்க இந்த குக்கர் உதவும். செராமிக் கோட்டிங் இருப்பதால் இதை பயன்படுத்துவது மற்றும் சுத்தம் செய்வதும் எளிது.

இதில் ‘வார்ம் மோட்’ என்ற வசதி உள்ளது. இதை தேர்வு செய்து விட்டால் தயாரிக்கும் உணவுப் பொருள் அப்படியே சூடாக இருக்கும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சூடு அப்படியே இருக்கும். இதனால் உணவுப் பொருளை நீங்கள் மீண்டும் சூடுபடுத்தத் தேவையில்லை.

இந்த குக்கரில் உணவுப் பொருள் வெந்து சரியான பதத்தை எட்டியதும் குக்கர் தானாக அதன் செயல்பாடுகளை நிறுத்திவிடும். இதனால் அதிக வெப்பம் ஏற்பட்டு உணவுப் பொருள் தீய்ந்து போகாது. அதேசமயம் குழைந்தும் போகாது. இதில் மெதுவாக சமைக்கும் வசதியும் உள்ளது. அதேபோல எண்ணெய்யில் பொரிக்கும் வசதியும் உள்ளது. இதில் பிரெஞ்ச் பிரை, பிங்கர் பிரை, நகெட், சமோசா உள்ளிட்டவற்றையும் பொரித்து எடுக்கலாம்.

அறிமுகம் செய்யப்பட்டபோது இதன் விலை ரூ. 4,500. தற்போது இலவச டெலிவரி வசதியையும் அமேசான் அளிக்கிறது. 39 சதவீத தள்ளுபடி விலையில் ரூ. 2,740-க்கு இதை வாங்கலாம். 

மேலும் செய்திகள்