சென்னை தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி முறியடிப்பு
சி.சி.டி.வி.யை பார்த்து மும்பையில் இருந்து எச்சரித்ததால் சென்னையில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.;
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக் கத்தை அடுத்த ராமாபுரம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த வங்கியின் உட்புறம் மற்றும் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை (சி.சி.டி.வி.) மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக பார்க்கலாம்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் வங்கி அருகே வந்தனர். பின்பு அந்த நபர்கள் அலாரத்தின் வயரை துண்டித்து விட்டு வங்கி கட்டிடத்தின் ஜன்னல் ஓரம் சென்றனர். மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைத்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் இதுபற்றி ராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரோந்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இதையடுத்து வங்கி கட்டிடத்தின் ஜன்னல் அருகே சென்று பார்த்தனர். அப்போது ஜன்னல் அருகே கியாஸ் சிலிண்டர் மற்றும் வெல்டிங் எந்திரம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனால் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது உறுதியானது.
வளசரவாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் அங்கு விரைந்து வந்த போலீசார் அங்கு இருந்த சமையல் சிலிண்டர் மற்றும் வெல்டிங் எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
வங்கியில் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அங்கு வந்த மர்ம நபர்கள் முதலில் அலாரத்தின் இணைப்பை துண்டித்து உள்ளனர். ஆனால் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக பார்க்கலாம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
இதனை அறியாமல் மர்மநபர்கள் ஜன்னல் கண்ணாடி கதவை திறந்து உட்பக்கமாக உள்ள இரும்பு கம்பிகளை வெல்டிங் வைத்து தகர்த்து உள்ளே செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்குள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் அங்கே வந்துவிட்டனர்.
போலீசார் வருவதை பார்த்த மர்மநபர்கள் துரிதமாக செயல்பட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றுள்ளனர். உரிய நேரத்தில் போலீசார் வந்ததால் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை போகாமல் தப்பியது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவங்களை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருகம்பாக்கம் பகுதியில் உள்ள வங்கியில் இதே போல் வடமாநில கொள்ளையர்கள் கியாஸ் வெல்டிங் மூலம் லாக்கர்களை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் அங்கு பணிபுரிந்த காவலாளி மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள வங்கியில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.