தென்காசியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி நகரசபை அலுவலகம் முன் அனைத்து கட்சியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update:2018-10-02 03:15 IST
தென்காசி, 


தென்காசி நகரசபை அலுவலகம் முன்பு நேற்று காலையில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் அகமது ஷா தலைமை தாங்கினார். செயலாளர் ஷேக், த.மு.மு.க. நகர செயலாளர் அப்துல் மஜித் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். புதிய சொத்து வரியை ரத்து செய்து விட்டு பழைய வரி விதிப்புகளையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் அபுபக்கர், முகம்மது அலி, அகில இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மைதீன் பிச்சை, செயலாளர் திவான் ஒலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஹக்கீம், செய்தி தொடர்பாளர் சந்திரன், வள்ளி நாயகம், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் அனைத்து கட்சியினர் சார்பில் நகரசபை அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்