அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நீதிமன்ற ஊழியர் சிறையில் அடைப்பு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பெரம்பலூர் நீதிமன்ற ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார்.;
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டியை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 30). இவர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்தார். முருகேசன் கடந்த சில ஆண்டுகளாக அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். ஆனால், அவர் கூறியபடி ஒருவருக்கும் வேலை வாங்கி தரவில்லையாம். இதனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு முருகேசனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து அவர் நீதிமன்ற பணிக்கு வராமல் தலைமறைவானார். இதனால் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தவர்களில் பலர் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 26-ந்தேதி திருப்பூர் நீதிமன்றத்தில் முருகேசன் சரணடைந்தார். அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி முருகேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகேசனை நேற்று காவலில் எடுத்து, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி மோகனப் பிரியா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது முருகேசனை வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து முருகேசனை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். முருகேசனை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான், அவர் எவ்வளவு பணம் மோசடி செய்தது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். முருகேசனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.