போலீஸ் நிலையம் முன்பு 3 பேர் தீக்குளிக்க முயற்சி
வாணியம்பாடி போலீஸ் நிலையம் முன்பு 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
வாணியம்பாடி,
வாணியம்பாடியை அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் விஜி (வயது 28), இருசக்கர வாகன மெக்கானிக். இவர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார்.
இந்த நிலையில் வாணியம்பாடி டவுன் போலீசார் நேற்று காலை ஒரு வழக்கு தொடர்பாக இவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் தனது மகன் திருந்தி வாழலாம் என்று பார்த்தால் போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்கு போடுகின்றனர் என கூறி வாணியம்பாடி நகர போலீஸ் நிலையம் முன்பு விஜியின் தந்தை மனோகர், தாய் ராஜேஸ்வரி, மனைவி மைதிலி ஆகியோர் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த பூச்சிமருந்து (விஷம்) டப்பாவையும் பறிமுதல் செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.