பிரபலமானவர்களின் வாகனம்
பார்முலா 1 கார் பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற முதல் இந்தியர், அதுவும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமைக்குரியவர் நரேன் கார்த்திகேயன்.;
கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன்
41 வயதாகும் இவர் இன்னமும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். ஆரம்ப காலங்களில் இவர் கார் ஓட்டக் கற்றுக் கொண்டது மாருதி 800 காரில்தான். இவரது தந்தையும் கார் பந்தயங்களில் ஈடுபட்டதால் அந்த ஆர்வம், இவரையும் முழு நேர கார் பந்தய வீரராக மாற்றியது. அதற்காக பிரான்சில் உள்ள கார் ரேஸ் பயிற்சி பள்ளியில் முறையாக கார் பந்தய நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். இவரது அபிமான கார் போர்ஷே 911 ஜிடி3.
இது தவிர ரேஞ்ச் ரோவர் வி8, புகாடி சிரோன், மெக்லரேன் எப்1, ஜாகுவார் இ-டைப் கார்களும் இவருக்கு மிகவும் பிடித்தமானவையாம். ரேஸ் பிரியருக்கு பல கார்கள் மீது ஆர்வம் இருப்பது இயற்கைதானே.