பாதுகாப்பான கார் பயணத்துக்கு உதவும் கேமரா
மூன்று அங்குல அளவிலான இந்த கேமராவை காரின் முன்புறக் கண்ணாடியில் பொருத்திவிட வேண்டியதுதான்.;
நைட் விஷன் எனப்படும் இரவிலும் பொருட்களை துல்லியமாக படம் பிடிக்கும் நுட்பம் இருப்பதால் காட்சிகள் தெளிவாகப் பதிவாகும். கார் நிறுத்துவது உள்ளிட்டவற்றிற்கும் உதவக் கூடியது. இதில் 6 கிரிஸ்டல் கிளாஸ் லென்ஸ் உள்ளது. கார் என்ஜின் ஸ்டார்ட் ஆனவுடனேயே இது ஆட்டோமேடிக்காக செயல்படத் தொடங்கும். இதில் உள்ள ஜி-சென்சார் காரின் செயல்பாடுகளை பதிவு செய்யும். திடீரென பிரேக் அடிப்பது, மிகவும் அபாயகரமான வளைவு உள்ளிட்ட அனைத்தையும் இது பதிவு செய்யும்.
இந்தக் கேமரா டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. சாலையின் சிக்னல்கள் ஒளிரும் நிறத்திற்கேற்ப நிறுத்து, புறப்படு என்று கட்டளையிடும். டிரைவர் அசதி காரணமாக கண்ணயர்ந்தால் இது எச்சரிக்கும்.
இரவு நேரத்தில் முகப்பு விளக்கு போடாமல் காரில் மறதியாக செல்வோமாயின் இது எச்சரிக்கை எழுப்பும். இவை அனைத்துமே பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கு உதவியாக இருக்கும். குளிர்காலம், அதீத குளிர் உள்ளிட்டவை குறித்தும் தகவல் தரும். இதில் உள்ள கேமரா லென்ஸ் அதிகபட்ச வெப்பத்திலும் செயல்படக்கூடியது. இதனால் எந்த சூழலிலும் இது செயல்படும். இதில் 6 ஜி.பி. நினைவக வசதியும் உள்ளது. இதனால் 10 மணி நேரம் பயணத்தை இது பதிவு செய்யக் கூடியது. தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகும் பப்பாகோ என்ற பெயரிலான இந்த கேமரா விரைவில் இந்தியாவிலும் கிடைக்கும்.