மோகனூரில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

மோகனூரில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2019-02-04 03:45 IST
மோகனூர், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம் மோகனூர் இ.பி.காலனியை சேர்ந்தவர் பிரபு (வயது 40). இவர் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

சேலம் மாவட்டம் பாலாஜிநகர் நெரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் வேலுமணி (60). அச்சகம் வைத்துள்ளார். இவரது மகள் ஐஸ்வர்யா (29).

பிரபுவிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜோவிதா (9) என்ற மகளும், சித்தார்த் (3) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை பிரபு வேலைக்கு சென்றிருந்தார். அப்போது வேலுமணி தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா செல் போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வேலுமணி குடும்பத்துடன் மோகனூருக்கு வந்து பார்த்துள்ளார். அங்கு வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. இதனால் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு வீட்டில் படுக்கை அறையில் ஐஸ்வர்யா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஐஸ்வர்யாவின் தந்தை வேலுமணி மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப் பதிவு செய்து ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்