தாந்தோன்றிமலை அரசு கல்லூரியில் கிராமப்புற வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பயிலரங்கம்
தமிழ்நாடு அரசு அறிவியல் தொழில்நுட்பக்கழகம் சார்பில் கிராமப்புற விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோருக்கான பயிலரங்கம் நேற்று தொடங்கியது.;
கரூர்,
கரூர் தாந்தோன்றிமலையிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் தமிழ்நாடு அரசு அறிவியல் தொழில்நுட்பக்கழகம் சார்பில் கிராமப்புற விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோருக்கான பயிலரங்கம் நேற்று தொடங்கியது. இதில் கிராமப்புற வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்கு என்கிற தலைப்பில் தாவரவியல் பேராசிரியர்கள் பேசினர். இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ரவிசந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பார்வதி வரவேற்று பேசினார். இதில் ஓய்வு பெற்ற திருச்சி மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் கலா, சேலம் அரசு கலைக்கல்லூரி தாவரவியல் துறையின் பேராசிரியர் கார்மேகம், தாவரவியல் துறை தலைவர் பழனிவேல், மாணவ, மாணவிகள், கிராமப்புற இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கார்த்திகேயன் நன்றி கூறினார். இந்த பயிலரங்கமானது வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் வாழை பதனிடுதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், உணவுகாளான் வளர்ப்பு, இயற்கை வேளாண்மை போன்ற தலைப்புகளில் பயிலரங்கம் நடப்பது குறிப்பிடத்தக்கது.