மாவட்ட செய்திகள்
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசு போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா பரிசுகள் வழங்கி பாராட்டினார். தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் சமீபத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தனர். அதேபோல் வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, ஞானராஜன், தலைமை காவலர்கள் சண்முகநாதன், காவலர் சொர்ணபாலன் மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து 28 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

அதே போல் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, ராஜசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, சிவலிங்கபெருமாள், முத்து விஜயன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, இருதயராஜ், சேகர் மற்றும் போலீசார்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பாராட்டி பரிசு வழங்கினார்.