லோக் அதாலத் திருவள்ளூர் மாவட்டத்தில் 957 வழக்குகள் முடித்து வைப்பு

லோக் அதாலத் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 957 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

Update: 2019-03-09 22:00 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக்அதாலத் நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பிச்சம்மாள், மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிபதி முகமதுபரூக், மாவட்ட நீதிபதிகள் சுஜாதா, சாந்தி, தமிழ்ச்செல்வி, சுபாஷினி, செந்தில்குமார், சார்பு நீதிபதி சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதே போல பொன்னேரி, பூந்தமல்லி, அம்பத்தூர், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, திருத்தணி பகுதிகளிலும் லே£க்அதாலத் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த லே£க்அதாலத்தில் கோர்ட்:டுகளில் நிலுவை மற்றும் நிலுவையில் அல்லாத குற்றவியல் சமாதான வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி வழக்குகள், குடும்பநல வழக்குகள், சிவில் வழக்குகள், நிலஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் என மொத்தம் 4 ஆயிரத்து 605 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அந்த வழக்குகளில் 957 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.18 கோடியே 4 லட்சத்து 27 ஆயிரத்து 251–க்கு தீர்வு காணப்பட்டது. பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் ‌ஷகிலா (வயது 27). இவருக்கும், திருவள்ளூர் மணவாளநகரை சேர்ந்த பாஸ்கரன் (29) என்பவருக்கும் 2008–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாஸ்கரன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பாஸ்கரன்– ‌ஷகிலா தம்பதிக்கு மகள், மகன் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் ‌ஷகிலா ஜீவனாம்சம் கோரி ஊத்துக்கோட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஊத்துக்கோட்டை கோர்ட்டில் நடந்த லோக் அதாலத்தில் நீதிபதி பாலகிருஷ்ணன் பாஸ்கரன்– ‌ஷகிலாவை அழைத்து அறிவுரை கூறினார்.

இதனை ஏற்று பாஸ்கரன் – ‌ஷகிலா தம்பதி சேர்ந்து வாழ முடிவு செய்து மனு எழுதி கொடுத்தனர். இதில் வக்கீல்கள் குணசேகரன், பி.என்.சாமி, பாலசுப்பிரமணியகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருத்தணியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் நேற்று லோக் அதாலத் நடந்தது. இதில் சார்பு நீதிபதி கபீர், குற்றவியல் நடுவர் நீதிபதி சுதாராணி, உரிமையியல் நீதிபதி ஜெகதீஸ்வரி ஆகியோர் தலைமையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாகரத்து வழக்கில் சமரசம் செய்யப்பட்டு பிரிந்திருந்த தம்பதி சேர்த்து வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்