மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சு

மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

Update: 2019-03-12 23:00 GMT
வேதாரண்யம்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினத்தில் விவசாயிகள் கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்ட விளக்க பிரசார கூட்டம் கரியாப்பட்டினத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ் மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுக்கும். விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. தி.மு.க ஆட்சி காலத்தில் தான் மீத்தேன் எடுப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதை தடுத்து நிறுத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருக்காரவாசலில் மக்கள் நடத்தும் போராட்டம் ஏற்றுக்கொள்ள வேண்்டியது. ஆனால் கரியாப்பட்டினத்தில் எவ்வித திட்டமும் இல்லாத நிலையில் போராட்டம் நடத்துவது தேவையில்லாதது. மக்களை தவறான வழிக்கு அழைத்து சென்று போராட்டத்தை தூண்டி விடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்