நாகர்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக முற்றுகை போராட்டம் 27 பேர் கைது

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.

Update: 2019-03-16 22:45 GMT
நாகர்கோவில்,

நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பசுமை தீர்ப்பாய தீர்ப்பின்படி குளங்கள், வாய்க்கால்களின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும், குளங்களில் சாலைக்காக நிரப்பிய மண்ணை உடனே அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் மகாசபாவும் (பாசனத்துறை), குமரி மாவட்ட விவசாய அமைப்புகளும் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-விடுதலை) இணைந்து நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.

போராட்டத்தில் மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி (விடுதலை) மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, மாநில நிர்வாகி சங்கரபாண்டியன், பூமி பாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ், சுசீலா, ஸ்ரீகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 27 பேர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் கே.பி.ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்