பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-03-16 22:30 GMT

தர்மபுரி,

பொள்ளாச்சியில் மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் இளவேனில், நிர்வாகிகள் அண்ணாகுபேரன், காவேரி, பழனியம்மாள், ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகி கவிதா ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்றமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் புகழேந்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்