நெல் மூட்டைகளை அதிகளவில் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

அதிகளவில் நெல் மூட்டைகளை கொள் முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-03-17 22:45 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் விவசாயிகள் பல ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிரை பயிர் செய்து, தற்போது அறுவடை செய்து வருகின்றனர். தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல்களை, தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபகழகத்தின் மூலம் குடோன் அமைத்து நெல் மூட்டைகளை சேகரித்து வருகிறது. இங்குள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்களை நாள் ஒன்றுக்கு 25 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் உடனடியாக விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் விவசாயிகள் குடோனுக்கு கொண்டுவந்த நெல்களை சாலை ஓரங்களில் கொட்டிவைத்து தார்ப்பாய் மூலம் மூடிவைத்துள்ளனர். இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு திடீரென மழைபெய்தால் நெல் மூட்டைகளை நனைந்து வீணாகும் நிலை ஏற்படும். எனவே உடனடியாக தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல் மூட்டைகளை அதிக அளவில் கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்